கோவில்பட்டி அருகே தண்ணீர் கட்டண உயர்வை திரும்ப பெற ரஜினி மக்கள் இயக்கம் கோரிக்கை
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் உயர்த்தப்பட்டுள்ள தண்ணீர் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரஜினி மக்கள் இயக்கத்தினர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் குடிநீர் இணைப்பு கட்டணம் வீடுகளுக்கு 51 ரூபாயிலிருந்து 110 ரூபாயாகவும் வணிக நிறுவனங்களுக்கு 121 லிருந்து 250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எட்டயபுரம் ரஜினி மக்கள் இயக்க நிர்வாகிகள் நகர செயலாளர் போஸ் பாண்டியன் தலைமையில் எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி உஷாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் எட்டயபுரம் ரஜினி மக்கள் இயக்க நகர இணை செயலாளர் முருகபூபதி, துணை செயலாளர்கள் ஜெயசந்திரன், முருகன், தகவல் தொழில் நுட்ப அணி முனியசாமி, நகர இளைஞரணி பொறுப்பாளர் முத்துக்குமார், இளைஞரணி செயலாளர் மருதுபாண்டியன், நகர செயற்குழு உறுப்பினர்கள் கல்யாணி, போப்பையா, கிறிஸ்டோபர், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை