Header Ads

  • சற்று முன்

    ஜெயலலிதாவின் ஆன்மாவின் துணையுடன் இந்த ஆட்சி நீடித்து நிற்கும், எந்த தேர்தலையும் சந்திக்க தயார் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ



    ஜெயலலிதாவின் ஆன்மாவின் துணையுடன் இந்த ஆட்சி நீடித்து நிற்கும், எந்த தேர்தலையும் சந்திக்க தயார், 20 தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அதிமுக வெற்றி பெறும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளர்.

    அதிமுக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி இன்று தனது தீர்ப்பினை வழங்கினார். தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பினை தொடர்ந்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


    இதன் பின்பு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகை யில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு 2 ஆண்டுகளாக இந்த அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அரசின் மீது நேரிடையாக கொண்டு வரமால், சபாநாயகர் மீது  திமுக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்தது. அதனை முறியடித்து, இந்த ஆட்சி மெஜரிட் ஆட்சியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு தடைக்கல்லாக இருந்தது, இந்த வழக்கில் தீர்ப்பு வந்தால், ஆட்சி போய் விடும் என்று எதிரிகள், துரோகிகள் கூறி வந்த நிலையில் இன்றைக்கு இந்த அரசு நீடித்து நிற்க கூடிய வாய்ப்பு வந்துள்ளது, இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும், எந்த தேர்தலையும் கண்டும் அதிமுக பயப்படவில்லை, ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போதும், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்றோம், உள்ளாட்சி தேர்தலுக்கும் வேட்பாளர்கள் அறிவித்தோம், திமுக நீதிமன்றம் சென்றதால் அது நடைபெறவில்லை. தற்போது நடைபெற்ற கூட்டுறவு தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.ஜெயலலிதாவின் ஆன்மாவின் துணையுடன் இந்த ஆட்சி நீடித்து நிற்கும், எந்த தேர்தலையும் சந்திக்க தயார்.தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதி, ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம், தனித்து நடைபெற்றாலும், நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்றாலும் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும், நீதிமன்ற தீர்ப்பினை பொறுத்தவரை எத்தகையை தீர்ப்பு வந்தாலும், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கூறியிருந்தோம், கடந்த முறை 2நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி இருந்தாலும் நீதிக்கு தலை வணங்கி ஏற்றுக்கொண்டோம், அந்த வகையில் 3வது நீதிபதியின் தீர்ப்பினை வரவேற்று ஏற்றுக்கொள்கிறோம் என்றார்..

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad