Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் விரைவில் செவிலியர் பயிற்சி கல்லூரி – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ



    கோவில்பட்டி இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாநகர் பகுதியில். தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் விடுகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் கோவில்பட்டி வ.உ.சி மேல்நிலைப்பள்ளியில், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி; தலைமை வகித்தார். இவ்விழாவில், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூகலந்து கொண்டு, கிருஷ்ணாநகரில், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், மத்திய. மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஏழை. எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிதரப்படுகிறது. ஏற்கனவே, கிருஷ்ணாநகர் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 92 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சியில் மட்டும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நல்ல அடிப்படை வசதிகளுடன், நல்ல காற்றோட்டமான பகுதியில் வீடுகள் கட்டி தரப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான், கோவில்பட்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டது. மேலும், ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி விளையாட்டு மைதானமும் கட்டி தரப்பட்டுள்ளது. கோவில்பட்டி பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க அரசு ஆணை வெளியிடப்பட்டு விரைவில் கட்டப்படும். அரசின் திட்டங்கள் இப்பகுதியில் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாநகர் பகுதியில் 212 விடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு விரைவில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி; பேசுகையில்
    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. இன்று கிருஷ்ணாநகர் பகுதியில் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 13062 விடுகள் ரூ.389 கோடி மதிப்பீட்டில் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவில்பட்டி நகராட்சியில் மட்டும் ரூ.71.19 கோடி மதிப்பீட்டில் 2373 வீடுகள் ஒப்புதல் பெறப்பட்டு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும் என்றார்.

    இதனை தொடர்ந்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூகோவில்பட்டி வ.உ.சி மேல்நிலைப்பள்ளியில், கோவில்பட்டி சட்டமன்ற உப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, அண்ணா பேருந்து நிலையம் அருகே காந்தி மண்டபத்தில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad