குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் மரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி இயந்திரவியல் முதலாமாண்டு மாணவன் திலீப்(17) உயிரிழந்தான்
அஞ்செட்டி அடுத்த ஹனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த திலீபன், தனியார் பொறியல் கல்லூரியில் சேர்ந்ததும் விடுதியிலேயே தங்கி பயின்று வந்தான்,

ஞாயிறு விடுமுறையான இன்று கல்லூரி வளாகத்தில் கிரிக்கெட் ஆடியபோது பந்தை எடுக்க கட்டிடத்தின் மீது ஏறியதாக சொல்லப்படுகிறது அங்கு உயர்மின்னழுத்த மின்சார வயர் முதுகுப்பகுதியில் உரசியதால் மாணவன் திலீபன் தூக்கி வீசப்பட்டான்,

உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் சூளகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் திலீப் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்

இச்சம்பவம் குறித்து சூளகிரி போலிசார் உடலை பிணக்கூறாய்விற்க்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் திலீபனின் உறவினர்கள், பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது |
ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி அவர்களின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு. உடலை பெற்றுக்கொண்டனர் பயில சென்ற மாணவன் பிணமாக வந்ததை திலீப் அவரின் தாயார் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியது,


செய்தியாளர் : ஓசூர் - சி. முருகன் 

கருத்துரையிடுக

புதியது பழையவை