• சற்று முன்

    100 அடி உயர கொடி கம்பத்தில் காணாமற் போன அதிமுக கொடி .... அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள்



    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மழையின் காரணமாக தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது இதனால் இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்னரே தொகுதியில் பல வளர்ச்சித் திட்டப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் கடந்த 10 நாட்களாக 100 அடி கொடிக்கம்பத்தில் அதிமுக கொடி கிழிந்து தொங்கிய நிலையில் இன்று காணாமல் போனது இது அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது



    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்ற நிலையில் அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு தினந்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர் இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் கனமழை காரணமாக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது இதனால் இடைத்தேர்தல் வரும் என்ற நிலையில் பல கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்



    மேலும் கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தோப்பூரில் முப்பெரும் விழா நடைபெற்றது அப்போது கட்சி சின்னம் கொடி கிடைத்த நிலையில் முதலாவதாக தோப்பூரில் கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக் கொடியினைஏற்றினார். ஏற்றப்பட்ட நாளிலிருந்து இரண்டு முறை அதிமுக கொடி கிழிந்து தொங்கியது இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைச்சர் உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்ற போது புதிய கொடி மாற்றப்பட்டது இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மீண்டும் அதிமுக கொடி கிழிந்து தொங்கியது இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை இந்நிலையில் இன்று அதிமுக கொடி காணாமல் போனது இது அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது இடைத்தேர்தலுக்காக ஆளும் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்

    முதலமைச்சரால் ஏற்றப்பட்ட 100 அடி கொடி கம்பத்தில் மீண்டும் கொடி பறந்திட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தினர்

    செய்தியாளர் ; திருபரங்குன்றம் - நீதி ராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad