Header Ads

  • சற்று முன்

    தள்ளு வண்டியாக மாறும் தமிழ்நாடு அரசு பேருந்து ......



    திருவாடானை பேரூந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழக பேரூந்தை பயணிகள் மற்றும் நடத்தினர் தள்ளியும் ஸ்டார்ட் ஆகாமல் அவதிக்குள்ளாகினர்.

    ராமநாதபுரம் மாவட்டம், திருவானை தாலுகா திருவாடானை பேரூந்து நிலையத்தில் செவ்வாய் கிழமை காலை 6.50 மணிக்கு இராமேஸ்வரம் செல்லும் பேரூந்து டி.எண் 55 என் 0725  திருவாடானை பேரூந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட நிலையில் பேரூந்து ஸ்டார் ஆகவில்லை. பின்னர் பேரூந்தில் வந்த பயணிகள் மற்றும் நடத்துனர் அணைவரும் தள்ளியும் ஸ்டார்ட் ஆகாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். அரசு பேரூந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. .இதே போல் கடந்த அக்டோபர் 19ம் தேதி திருச்சியில் இருந்து இராமேஸ்வரம் சென்ற பேரூந்து மாலை 6.00 மணியளவில் சின்னகீரமங்கலம் அருகே பழுதாகி நின்றுவிட்டது டிரைவர் எல்லா முயற்சி எடுத்தும் தோல்வியடைந்த நிலையில் பயணிகளை வேறு பேரூந்தில் ஏற்றிவிட்டனர். இதனால் பயனிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இப்படி அரசு பேரூந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் பயணிகள் அரசு பேரூந்தில் பயணம் செய்யும் பேரூந்துகள் எப்பொழுது நிற்கும் என்ற ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. இது குறித்து பயணிகள் கூறுகையில் தனியார் பேரூந்துகள் சில பேரூந்துகளை வைத்து லாபம் சம்பாதிக்கும் நிலையில் அரசு பேரூந்துகளால் மட்டும் எப்படி நஸ்டம் உண்டாகும். மேலும் பேரூந்துகளை பராமரிப்பது இல்லை மாறாக டீசல் மிச்சப்படுத்த வேண்டும் என்று டிரைவகைளை கட்டாயப்படுத்தவதாகவும் கூறுகின்றனர். டிரைவர்களும் டீசலை மிச்சப்படுத்துவதற்காக முதல் கியரில் சென்ற சிறிது தூரத்திலேயே டாப் கியரில் பேரூந்தை இயக்குவதால் பேரூந்துகள் பழுதாகிறது என்றும், அதே போல் இரவில் நிறுத்தும் பேரூந்துகளை பணிமனையில் சுத்தமாக பராமரிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


    திருவாடானை

    லெ.ஆனந்த குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad