Header Ads

  • சற்று முன்

    ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க எதிப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...



    மத்திய அரசு தமிழகத்தில்  ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கும், 



    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேரின் உயிர் பலிக்கு காரணமான கார்ப்பரேட் வேதாந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கியுள்ளதை வன்மையாக கண்டித்தும், மத்திய பாஜக அரசின் சதிச் செயலுக்கு தமிழக எடப்பாடி  அரசு துணை போகாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 11 மையங்களில் அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     கோட்டூர் தபால் நிலையம் முன்பு  கட்சியின் மாவட்ட செயலாளர்,  முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் தலைமையிலும் மன்னார்குடியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமையிலும் திருத்துறைப்பூண்டியில் மாநிலக்குழு உறுப்பினர் கே.உலகநாதன் தலைமையிலும் நீடாமங்கலத்தில் மாவட்ட துணைச் செயலாளர் இரெ.ஞானமோகன் தலைமயிலும் திருவாரூரில் மாநிலக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலமணி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 

    மேலும் குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நன்னிலம், முத்துப்பேட்டை, வலங்கைமான் உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட சுமார்  5000 பேர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

    செய்தியாளர் : திருவாரூர் - பாலா

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad