அஞ்செட்டி அருகே கோவில் விவகாரத்தில் இரு கிராமங்களிடையே மோதல்,
அஞ்செட்டி அருகே கோவில் விவகாரத்தில் இரு கிராமங்களிடையே மோதல், சாலை மறியல் ஈடுப்பட்ட கிராமக்கள் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு*
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாற்றம்பாளையம் அருகே உள்ள பத்தி கவுண்டனூர் மற்றும் ஜீவா நகரை சேர்ந்த இரு கிராமங்களிடையே கோவில் விவகாரத்தில் மோதல் ஏற்ப்பட்டு பத்திகவுண்டனூர் கிராமக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈட்டுப்பட்டுள்ளனர். அஞ்செட்டி அடுத்த நாற்றம் பாளையம் அருகே பத்திகவுண்டனூர் மற்றும் ஜீவா நகர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கோட்டை மாரியம்மன் கோயில் யார் பராமரிப்பது யார் சொந்தம் கொண்டாடுவது என்று கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது
இரு கிராமங்களிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை காவல் நிலையத்தில் புகார் ஆக மாறி நீதிமன்றத்துக்கு சென்று வந்தனர் நீதிமன்றத்தில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதன்படி தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு பீஸ் கமிட்டி அமைத்து பத்திகவுண்டன் கவுண்டன் சேர்ந்தவர்களையும் மற்றும் ஜீவா நகரை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதானமாகப் பேசி சுமூக முடிவை ஏற்படுத்த முயன்று உள்ளார் காவல்துறையினர், ஆனால் இரு தரப்பிலிருந்து சரியாக ஆட்க்கள் வராத காரணத்தினாள் இந்த முயற்சி மூன்று முறை தள்ளி போய் உள்ளது, மூன்று முறையும் இரு தரப்பில்லிருந்து முறையாக பீஸ் கமிட்டியில் பேச வராததாள்,
காவல்துறை சார்பில் பிரச்சனைக்குறிய கோட்டை மாரியம்மன் கோயிலை பூட்டு போடப்பட்டு, இரு கிராமத்தை சேர்ந்த நபர்கள் யாருமே கோவில்லை திரக்ககூடாது கோவில் பற்றி பேசி பிரச்சனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி உள்ளனர், ஜீவா நகரை சேர்ந்த ஒரு சிலர் பேச்சு வாத்தையை மீரி கோவிலில் பூஜை நடத்தி வருவதாவும் அவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால், பத்திகவுண்டனுர் மக்கள் கேட்க சென்றுள்ளார. அபோது இரு கிராமத்தினரிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முத்தி பத்திகவுண்டனுர் கிராமமக்கள் அஞ்செட்டி – ஒகேனக்கல் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டு வநகிறார்கள்.
அஞ்செட்டி போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், மறியலை கைவிடா மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவ்வழியாக வரும் வாகணங்கள் இருப்புரம் நிக்க வைக்கப்பட்டுள்ளது, அப்பகுதி பரப்பரப்பாக காணப்படுகிறது.
செய்தியாளர் : ஓசூர் -சி. முருகன்
கருத்துகள் இல்லை