Header Ads

  • சற்று முன்

    தேவர் ஜெயந்தி நிகழ்சியில் இயக்குனர் பாரதிராஜா


    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கடந்த 1981ம் ஆண்டு அமைக்கப்பட்டு இருந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை சீரமைப்பு பணிகள் இனாம்மணியாச்சி சோலையப்பத்தேவர் குடும்பத்தினர் முயற்சினால் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேவர் சிலையை திறந்து வைத்தனர். 

    இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சமூகத்திற்கோ, தமிழகத்திற்கு மட்டும் சொந்தமானவர் கிடையாது, அவர் தேசியத்திற்கு சொந்தமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேவருக்கு சென்னை நந்தனத்தில் சிலை வைத்தது மட்டுமின்றி, பசும்பொன்னில் அவரது நினைவு இடத்தில் சிலைக்கு தங்ககவசம் வழங்கினார். அவரது வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு பள்ளி பாடத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவர் குறித்த வரலாற்றினை மீண்டும் பாடபுத்தகத்தில் இடம் பெற செய்துள்ளது என்றார்.

    தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா பேசுகையில் உலகில் மனிதன் பிறக்கலாம், இறக்கலாம் ஆனால் வாழ்வியல் பதிவு வேண்டும், அந்த வாழ்வியல் வரலாற்று பதிவினை கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பலர் வாழ்வில் முன்னேற ஏணிப்படியாக திகழ்ந்தவர், எந்த பதவியையும் விரும்பதாவர், புத்தரை நாம் நேரில் பார்த்து கிடையாது, ஆனால் நம்மிடைய வாழ்ந்த விபூதி பூசிய புத்தர் தேவர், தனது இறுதி காலங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர்களுக்கு தனது நிலங்களை வழங்கியவர், அவரது வழியில் சமுதாய மற்றும் அரசியல் பணியினை செய்ய வேண்டும் என்றார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளது குறித்து கேள்விக்கு திரைப்பட இயக்குநர் பாரதிராஜா  காலம் பதில் செல்லும், உலக தமிழர்கள் பதில் சொல்வர்கள் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad