
கோவில்பட்டியில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பாக 111வது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, விழாவினை முன்னிட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இரத்த தான முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை (எ) செல்வம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன் இரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரபாகர், தேவசேனா ஆகியோர் இரத்த தானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜகோபால், 5வது தூண் நிறுவனர் சங்கரலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஜீவ அனுக்கிரஹா பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், இலக்கிய உலா ரவீந்தர், 5ம்தூண் நிர்வாகி முருகன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் காளிதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கோட்டூர்சாமி, நாம் தமிழர் கட்சி மகேஷ், தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பாலமுருகன், நேதாஜி இரத்த தான கழக நிர்வாகி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்முடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை (எ) செல்வம் மற்றும் அதன் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை