• சற்று முன்

    கோவில்பட்டி அருகே கேஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு


    கோவில்பட்டி இடைச்செவல் அருகே மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டு இருந்த இன்டேன் நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் சிலிண்டர் லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லாரி சாலையின் அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய டிரைவர் ராஜ்குமாரை தீயணைப்பு படையினர் காப்பாற்றினர் மேலும் லாரியின் டீசல் டேங் சேதமடைந்து டீசல் வெளியேறிதால் பரபரப்பு ஏற்பட்டது.


    திண்டுக்கலைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராஜ்குமார். இவர் மதுரையில் உள்ள இன்டேன் கேஸ் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டெர் லாரிடிரைவராக வேலைபார்த்து வருகிறார். இன்று காலையில் மதுரையில் இருந்து நெல்லைக்கு லாரியில் கேஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். லாரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் பகுதியில் வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கேஸ் சிலிண்டெர் லாரி நிலை குலைந்து , அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில் டிரைவர் ராஜ்குமார் லாரியின் அடியில் சிக்கி கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்ரை டிரைவர் ராஜ்குமாரை மீட்டனர். மேலும் லாரியின் டீசல் டேங் சேதமடைந்து , டீசல் வெளியேறிது, இதனால் தீ விபத்து ஏற்படமால் இருக்க தீயணைப்புத்துறையினt சோப்பு நுரை கொண்டு தடுத்தனt. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எமது செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad