Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தூக்கிலிட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் கைது


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அக்கறை காட்டி வரும் தமிழகரசினை கண்டித்தும், இந்திய பாரத பிரதமரை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறப்பு சட்டம் இயற்றி உடனடியாக தூக்கிலிட வேண்டும், 

    மேலும் அவர்களின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தினை தொடங்கினார். உடலில் தனது கோரிக்கை அடங்கிய பதாகைகள் மற்றும் ராஜீவ் காந்தி படத்தினை தங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உண்ணாவிரதம் இருந்த அய்யலுச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad