திருவாடானை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர். குமரகுருபரன் அவர்களின் உத்தரவின்பேரில் சிறப்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் பாலமுருகன் தலைமையில், திருவாடானை காவல்துறை ஆய்வாளர் திருமதி.R. புவனேஸ்வரி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். R.வைதேகி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. A.வீரப்பெருமாள் அனைவரையும் வரவேற்றார். நீதிபதி பேசுகையில் அரசு நலத்திட்டங்கள் பற்றியும், பொதுமக்கள் நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை பாண்டுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர். டாக்டர். கோவலக்கண்ணன், பகுதி சுகாதார செவிலியர் திருமதி சுசீலா மற்றும் சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
செய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார்
கருத்துகள் இல்லை