Header Ads

  • சற்று முன்

    திருவாடானை வரலாற்று சிறப்பை மாணவர்கள் அறியும் வகையில் மரபு நடை நிகழ்வு நடைபெற்றது



    திருவாடா.னையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் கண்டு கொள்ள ஏதுவாக மரபு நடை நிகழ்வு நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு ஊர்கள் உள்ளன இந்தப் பகுதிகளில் இருக்கும் வரலாற்று சிறப்புகளை அறிய ஏதுவாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மரபு நடை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது அதன்படி ஒன்பதாம் நிகழ்ச்சி திருவாடானையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திருவாடானை  தேவிபட்டினம்  நம்புதாளை  பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு மாணவ மாணவியர் மற்றும் மக்களிடையே திருவாடானையில் ஒன்றியத்தை சுற்றி கோட்டை என முடியும் ஊர்கள் 28 க்கும் மேல் உள்ளது இவை நெல் விளையும் கோட்டை என்பதால் இப்பெயர் பெற்றதாக சொல்லப்படுவதாகும் வணிகர்கள் தொடர்பால் இப்பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன என்றும் இங்கு திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஆடா கன நாயகர் கோயில் உள்ளது தேவாரப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் இவ்வூர் ஆடானை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது களப்பிரர் பாண்டியர் ஆட்சி காலத்தில் முத்தூற்றுக் கூற்றம் என்னும் நாட்டுப் பகுதியில் இவ்வூர் இருந்ததாக வரலாற்று களில் உற்ற தாத தெரிவித்தார்.

    மேலும் மத்திய தொல்லியல் துறை எடுத்த நான்கு கல்வெட்டுகளில் இரண்டு பிற்கால பாண்டிய காலத்தையும் இரண்டு சேதுபதி காலத்தையும் சேர்ந்தவை என்றும் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கோவிலுக்கு நிலக்கொடை வழங்கியதையும் நிலம்தானமாக வழங்கப்பட்டதையும் இவை தெரிவிக்கிறது என்றும் கல்வெட்டுகளில் இரண்டில் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத் சன்னதியில் சிவன் ஆலயத்திலும் அம்மன் சன்னதியின் வடக்கே ஒன்றும் இரண்டு கல்வெட்டுகள் தரையில் பதிக்கப்பட்டுள்ளதை மாணவ மாணவிகளும் அந்த கல்வெட்டுகளின் காண்பித்து அதில் எழுதியிருந்த வார்த்தைகளை விளக்கி கூறினார் இந்த மரபு நடை நிகழ்ச்சியில் திருவாடானை தேவிப்பட்டினம் நம்புதாளை பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வு நிறுவன செயலாளர் ஞான காளிமுத்து வரவேற்று பேசினார்.

    செய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad