கோவில்பட்டியில் உலக பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு – பெண்குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து, மகுடம் சூட்டி மரியாதை
உலகம் முழுவதும் அக்டோபர் 11ந்தேதி உலகம் முழுவதும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் உலக பெண்குழந்தைகள் தின விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், வட்டார குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழா பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளியில் வைத்து நடைபெற்றது. நகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவிகள் 75க்கும் மேற்பட்டோர்க்கு பூர்ணகும்ப மரியாதை அளித்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து நெற்றி திலகமிட்டு கிரிடம் அணிவித்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கத்தலைவர் ஆசியாபாhம்ஸ் பாபு தலைமை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியை ராஜசரஸ்வதி, ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சாந்தி அனைவரையும் வரவேற்றார்.
வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு கிரிடம் அணிவித்து பேசினார்.விழாவில் ரோட்டரி இன்ட்ராக்ட் சேர்மன் கண்ணன், ரோட்டரி சங்க பொருளாளர் பால்ராஜ், உறுப்பினர்கள் முத்துமுருகன், பிரபாகரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பொன்இசக்கி பள்ளி ஆசிரியர்கள் வசந்தகுமாரி, கலைவாணி உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியை தேவிகா நன்றி கூறினார்.
செய்தியாளர் :கோவில்பட்டி - சிவராமலிங்கம்
செய்தியாளர் :கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை