Header Ads

  • சற்று முன்

    பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரி யில் 86 வது ஆண்டு விழா ராயல் பார்க் அரங்கில் நடைபெற்றது



    பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரி யில் 86 வது ஆண்டு மாணவர்கள் சந்திப்பு திண்டுக்கல் ரோட்டில் உள்ள ராயல் பார்க் அரங்கத்தில் 20.10.18 அன்று சிறப்பாகவும், கோலாகலமாக நடந்தது.

    இக்கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் வேதியியல் பேராசிரியர்கள் கருணாகரன், மீனாட்சி இயற்பியல் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி, மின்னணுவியல் பேராசிரியர்கள் நாகராஜன், லலிதா அனைவரையும் அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர். அவர்கள் மாணவர்களை வாழ்த்தி    இன்றைய சூழலில்   மாணவர்கள் பற்றியும், இக்கல்லூரியின் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு, பயிற்சிகள் கொடுப்பதை பற்றி விவாதித்தார்கள்

    இந்த மாணவர்கள் அனைவரும் தொழில் அதிபர்களாகவும், மேலாளராகவும்,அதிகாரிகளாகவும், கப்பல் படை அதிகாரிகளாக, விவசாயம் பார்ப்பவர்களாக இருக்கின்றனர். அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்கள் பழைய நினைவுகளின் ஆழத்தில் மூழ்கினர். இன்றைய குடும்ப நினைவுகளை,பிரச்சினைகளை பற்றி பேசினார்கள் சிறந்த மதிய உணவு ராயல் பார்க் ஆனந்த பவனில் சாப்பிட்டார்கள்

    இந்நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் அனைவரும் மிக சந்தோசாமாக , டெல்லி, பெங்களூர், சென்னை திருச்சி, ஈரோடு, நாகர் கோயில்,திண்டுக்கல் மற்றும் பழனி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சி முடிவில் பிரிய முடியாமல் பிரிந்து சென்றனர். இதுவே 32 ஆண்டுகளுக்கு பின்  பழைய மாணவர்கள் நடத்திய முதல் சந்திப்பு

    செய்தியாளர் : பழனி - சரவணக்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad