Header Ads

  • சற்று முன்

    பெண்கள் இணைப்பக் குழுவின் 18 வது மாநில மாநாடு நடைபெற்றது


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெண்கள் இணைப்புக் குழுவின் களஞ்சியம் பெண் விவசாய சங்க சார்பில் 18 வது மாநில மாநாடு சிறுதானியங்களை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பெண்கள் இணைப்புக் குழு மாநிலத் தலைவி ஷீலு தலைமை வகித்தார். பழனியம்மாள் முன்னிலை வகித்தார்


    அருள்செல்வி விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசினார். இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலாளர் தமிழரசன் கலந்து கொண்டு மாநாட்டினை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் மானாவாரி பயிரான சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், தமிழகத்தில் உள்ள நியாய விலை கடை, சத்துணவு கூடங்கள், மாணவ மாணவியர் விடுதிகள், அரசு மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள், சிறைச்சாலை போன்ற அரசு உணவு வழங்கும் திட்டங்களில் சிறுதானியங்கள் வழங்கப்பட வேண்டும், சிறுதானியம் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகள் விவசாய வேலைகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ளடக்க வேண்டும், 


    சிறுதானியத்தை அரசு கொள்முதல் செய்து 50 சதவீதம் சம்பளமும் உள்ளடக்கிய லாபகரமான விலை உறுதி செய்ய வேண்டும், ஊராட்சி அளவில் தானியக் கிடங்குகள் அமைத்து விவசாய பொருட்களை அங்கு சேமித்து, பராமரித்து, பாதுகாத்து விவேகம் செய்யப்படவேண்டும். இதன் மூலம் பயணச் செலவு குறையும், பூச்சி தாக்காத, சத்துள்ள உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும், எனவே அரசு தானியக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெயலட்சுமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க நிர்வாகி மேரி ஷீலா செய்திருந்தார்சிறு தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், சிறுதானிய உற்பத்தி செய்யும் பணியினை தேசிய ஊரக வேலைவாய்ப்பு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  கோவில்பட்டியில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறுதானியங்களை மீட்டெடுப்போம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad