யோகதா சத்சங்க சொசைட்டியின் கிரியா யோகா விழ்ப்புணர்வு நடைபெற்றது
சென்னை ஹரிங்ண்டன் சாலை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் யோகோட சத்சங்க தியான கேந்திர சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Dr, சஞ்சய் தத் சிறப்பு அழைப்பளராக வந்து சிறப்புரையாற்றினார் .சுவாமி சுதானந்தா கிரி அவர்கள் கிரியா யோக மற்றும் தியானம் குறித்து உரை நிகழ்த்தினார்.
யோகதா சத்சங்க சொசைட்டி ஒரு யோகியின் சுயசரிதம் என்ற பிரசித்தி பெற்ற ஆன்மீக இலக்கிய நூலின் ஆசிரியரான ஸ்ரீ ஸ்ரீ பிரமஹம்ஸ யோகானந்தரால் 1947 நிறுவப்பட்டது. இவ்விலக்கிய நூல் 14 இந்திய மொழிகளையும் சேர்த்து 48 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. yss ஒரு ஆன்மீக மற்றும் அறச்சிந்தனை சார்ந்த நிறுவனம் இது அனைத்து இன மொழி, மதம் கலாச்சார மக்களும் பொதுவானது மற்றும் சிரத்தையுள்ள அனைத்து ஆன்மீக சாதகர்களுகும் பரமஹம்சரின் சோதனைகள் கிடைக்கச் செய்கிறது. இதன் முக்கிய நோக்கங்களில் ஓன்று அனைத்து உண்மையான மதங்களிடையே உள்ள முழு நல்லிணக்கம் அடிப்படை ஒற்றுமை மற்றும் கோட்பாட்டு ஆகியவற்றை வெளிபடுத்துவதாகும்.
நேற்று நடந்த நிகழ்சியில் ஸ்ரீ பரமஹம்சரால் உருவாக்கப்பட்ட சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் போன்ற விஞ்ஞன பூர்வமான உத்திகள் சொந்த இறை அனுபவத்திற்கு இட்டுச் செல்லும் மண் ஒருமைப்பாடு மற்றும் தியான உத்திகள் வாயிலாக மனிதனின் மூவகை துன்பங்களை உடல் நோய் மனக்கவலைகள் மற்றும் ஆன்மீக அறியாமை ஆகியவற்றில் இருந்து அவனை விடுவித்தல் மனித இனத்திற்கு அதை தன்னுடைய பேரான்னமைவாக கருதி சேவை செய்தல் ஆகியவை yssன் மற்ற இலகுகளில் அடங்கும்,
மனித உணர்வுநிலையை மிக உயர்ந்த விழப்பு நிலைகளுக்கு ஈர்த்து படிப்படியாக அக விழிப்பினை கொணரும். கிரியா யோக உத்தி தான் இவ்வுத்திகளின் மிக உயர்ந்த ஓன்று.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை