Header Ads

  • சற்று முன்

    மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்



    போச்சம்பள்ளி அடுத்த மின்டிகிரி அருகே ஏசுநாதர் கோவில் கொல்லக் கொட்டாய் என்னுமிடத்தில் விவசாய நிலத்தில் குடிசை வீடு அமைத்து வசித்து வருவபர் மங்கம்மாள் (60). இவருடன் இவரது மருமகள் ஜோதி மற்றும் அவர்களது 3 மகன்கள் சுப்பிரமணியன் (5), கலைச்செல்வன் (3) அரசன் (9 மாதம்) ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் மங்கம்மாளின் மாமியார் லட்சுமி என்கிற  மூர்த்தியம்மாள் (85) ஆகியோர் உள்ளனர்.



    இந்நிலையில் இன்று மதியம் மங்கம்மாள் வீட்டின் உள்ள மின்சுவிட்ச் ஆன் செய்ய முற்பட்டபோது, சுவிட்ச் பெட்டியிலிருந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வயர்களில் ஆங்காங்கே தீப்பொறி ஏற்பட்டதை அடுத்து பதறிப்போன ஜோதி வீட்டின் வெளியே இருந்த மெயின் சுவிட்சை அணைத்துள்ளார். அதற்குள்ளாக வயர் முழுவதும் தீ பிடித்து எரிந்து கூரை மீது பற்றியுள்ளது. இதனை அறிந்த ஜோதி சப்தம்போட்டு வீட்டிலிருந்த குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் நடக்க முடியாத வயதான பாட்டையை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதற்குள்ளா வீடு முழுவதும் தீபிடித்து எரியத்துவங்கியுள்ளது. வீட்டிலிருந்த தாங்கி பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய கட்டைகளை தீ பிடித்து எரிந்து பாட்டி படுத்திருந்த கட்டில் மேல் விழுந்தது. பாட்டியை காப்பாற்ற முடியாமல் வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறினர்.



    தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் கூரை வீடு, அருகிலிருந்த மாட்டு கொட்டகை, வைக்கோல் போர், வீட்டிலிருந்த கிரைண்டர், மிக்சி, கட்டில், டிவி, கேஸ் அடுப்பு, 3 சிலின்டர், பீரோ, பீரோவிலிருந்த 50,000/- ரூபாய் பணம், 7 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின, பாட்டி மூர்த்தியம்மாள் முழுவதுமாக எரிந்து கரிக்கட்டையானார். அவரை வெளியேற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றன,

    செய்தியாளர் : கிருஷ்ணகிரி - மணிகண்டன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad