Header Ads

  • சற்று முன்

    என்னைக் கொல்லாதே .... இதன் முன் கதை தொடர்ச்சி 02.09.18 பார்க்கவும் ஆசிரியர் : நீலம் மூன்    மரணம் காத்திருக்கிறது என்று எழுதப்பட்ட வார்த்தை அதிர்ச்சி தரவும், இதை அனுப்பியது யார் அறிந்துக்கொள்ள துடித்தான். காந்தனை அங்கேயே அமர சொல்லிக் கூறி விட்டு வெளியை தாண்டி வேகமாக நடந்தான். சாலையில் ஒருவரும் காணப்படாமல் வெறிச்சோடி இருந்தது.சுற்றிலும்   கண்களால் தேடினான். பத்தடி தள்ளி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தன்னிடம் கடிதம் தந்தவன் இருக்கிறானா என ஆராய்ந்தான். எவருமில்லை. சரிஎன திரும்பும்போது பக்கத்து சந்திலிருந்து  தலை மட்டும் நீட்டி எட்டி பார்த்தவனைக் கண்டான். உடனே அவன் அருகில் செல்வதற்குள்  ஒட்டம்எடுத்தான்.சட்டென பாய்ந்து சட்டையைப் பிடித்து டேய் இதை யாரு கொடுத்தது சொல்லுடா, நீங்க யாருன்னு தெரியாது இதை பற்றி கேட்டா புரியில்ல அண்ணா பேச்சை மழுப்பினான். கொஞ்ச  நேரத்துக்கு முன்னாடி  அந்தவீட்டுக்கு வந்து  என்னிடம் லெட்டர்  கொடுக்கல லூசு அண்ணா நீங்க , இங்கே   நானு விளையாடிட்டு இருந்தா அங்கே வந்ததா சொல்றீங்க 
    இல்ல இல்லா நீ வந்தே சிறுவனின் கரத்தைப் பிடித்தான். நீலேஷ் ஐயோ புள்ள பிடிக்கிறவன் காப்பாத்துங்களேன் என்று சத்தம்போட்டு கத்தினான். சிறுவன். அதே, சமயம் ஸ்கூட்டியில் வந்த பெண். வண்டியை நிறுத்தி மிஸ்டர் எதுக்கு இந்த பையனிடம் வம்பு பண்றீங்க கேட்டவாறு எல்மெட்டைக் கழற்றினாள். லிப்ட் கொடுத்தசிங்காரி.                      ஹலோ ...மிஸ்...இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று தலையிடாதீங்க.    புள்ள புடிக்கிறவன் என்று கத்தறான். கேட்டுட்டு சும்மா போகனுமா, அப்போ ரோட்டுல போற நாலு பேரு சேர்ந்து மொத்தனுமா. டேய் என்ன வம்பு செய்தே பையனிடம் கேட்டதும். அவன் மருண்டு விழித்து  இருவரையும் மாறி மாறி பார்த்தவன். சும்மா தொந்தரவு தந்தா அதோ புதுசா  கட்டடம் கட்டுற எட்டாவது மாடியிலே இருந்தது குதிச்சு சாவுக்கு  நீலேஷ் காரணம் லெட்டர் எழுதிடுவேன் ஜாக்கிரதை என்று அச்சுறுத்தினான்.  ஒருகணம்  இருவரும் அசந்து நின்றனர்.  பின்பு நீலேஷ்  ஒருவாறு   சுதாரித்துக்    கொண்டு அது கிடக்கட்டும் என் பெயர் உனக்கு எப்படி தெரியும் சொல்லு   சிறுவன் நெஞ்சை நிமிர்த்தி அதுஉனக்கு அனாவிசியம் சொன்னபடி நடக்கும் எனக் கூறி   ஓட்டம் எடுத்தான், இவனுக்கு பின் குழுவாக கூட்டமே செயல்படுகிறது கண்டுப் பிடிக்க   வேண்டும் என முடிவெடுத்தான்.    அருகில் நின்றவளிடம் என்ன சொல்வதென்று திருதிருவென முழித்தான். நீலேஷ்,  உங்க  நண்பன் வீட்டுல  தானே  ராகினி ஆன்டி இறந்தாங்க இந்த சிறுவனுக்கும் மரணத்திற்கும் இடையேயான சம்பந்தம்  எதுவும் புரியில்ல             மிஸ்.....வெண்ணிலா என்று தன் பெயரைக் கூறினாள்..    நிலா இந்த பேப்பரை பாருங்க நீட்டினான். அதில் மண்டை ஓட்டின் மீது இரத்தக்கறையில் உனக்கு மரணம் காத்திருக்குது என்ற வாசகம் பீதியை ஏற்படுத்தியது சிறுநடுக்கத்துடன் நீலேஷை  கூர்ந்து நோக்கினாள்.    இந்த தாளை இவன் தான் கொண்டு வந்து ஐந்து நிமிடத்திற்கு முன்பாக கொடுத்தான். ஆன்டியின் மரணம் மர்மமான இருக்கு. சரி நிலா, தோட்டத்தில்  நண்பன் காத்திருப்பான்  .வரேன்னு வந்த  வழியே    திரும்பப் பார்த்தான்.    நில்லுங்க, நானும் வரேன்  என்னுடைய வீடு எதிரேதான் உள்ளது.     ஒ...ஒ அப்படியா, ம்...ம்  ஆன்டியை  பார்த்திருகிறீங்களா      கேள்வி பட்டிருக்கேன். இந்த ஊருக்கு வந்த அன்று தான் அந்த சம்பவம் நடந்தது.  அப்புறம் அப்பா ரொம்ப வருத்தப்பட்டாரு. ஆன்டி மாதிரியே உள்ள பெண்ணு நேத்து ராத்திரி வாசல்ல பார்த்து இருக்காரு. அவங்க  கூட......          

    கருத்துகள் இல்லை