திருவாடானை அருகே அடிக்கடி நடக்கும் வாகனம் எரிப்பு, பீதியில் மக்கள்
திருவாடானை அருகே அடிக்கடி நடக்கும் வாகனம் எரிப்பு, பீதியில் மக்கள் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை
இராமநாதாரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளையில் மர்ம மனிதர்களால் தொடரும் வாகனம், எரிப்பு சம்பவம், இப்படி அடிக்கடி தொடர்கிறது .காரணம் யார் என்று தெரியவில்லை. மர்ம மனிதர்களால், நேற்று இரவு சாதிக் அலி ( 50), அலி (26) ஆகியோர்கள் து இரண்டு பைக்குகள் எரிக்கப்பட்டன. இதேபோல் கடந்த 2 மாதம் முன்பு ஒரு ஆட்டோ. மூன்று பைக் எரிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கல் என்ன காரணத்திற்காக நடை பெறுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில் இந்த சம்பவத்விற்கு முன்விரோதமா, திட்டமிட்ட சதியா, பாசிசவாதிகளின் திட்டமா, கயவர்களின் கருவாளித்தனமா. என்பது தெரியவில்லை, இந்தச் சம்பவத்தால் பொது மக்கள் பீதியில் உரைந்துள்ளதாக தெரிவித்தார்கள். எதுவாக இருந்தாலும் இந்த சம்பவம் குறித்து போலிஸ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை வைத்தார்கள்.
கருத்துகள் இல்லை