Header Ads

  • சற்று முன்

    தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேர தூது – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


    கோவில்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற 12ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிகழ செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற அன்னதானத்தினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தனார். நிகழ்ச்சியில் அதிமுக நகரசெயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ஊராட்சி செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கணேசன், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மகேஷ்குமார்,ஸ்ரீசித்த விநாயகர் திருக்கோவில் விழாகமிட்டி நிர்வாகி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெள்ளத்துரை, அதிமுக நிர்வாகிகள் பாலமுருகன், ராமசந்திரன், போடுசாமி, செண்பகமூர்த்தி, மாதவன், செல்லையா, பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதனை தொடர்;ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேiசுகயில் ஊழல் பற்றி ஆதாரம் இருந்தால் டி.டி.வி தினகரன் சட்டமன்றத்தில் பேசலாம், லஞ்சம், ஊழல் என்றும் பொத்தம் பொதுவாக பேசக்கூடாது ஆதாரத்துடன் பேசவேண்டும் என்றும், நீட் தேர்வு அறிவிப்புக்கு பின்பு தமிழக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் புதிய பாடத்திட்டம் தற்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வெற்றியினால் அடுத்தாண்டு அனைவரும் அரசு பள்ளிகளை தேடி வருவார்கள் என்றும், தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை, அதனால் தான் அரசுக்கும், எதிராக ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறிவருகின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்துக்கள் தெரிவிக்கவும், போராட்டங்கள் நடத்தவும் ஜனநாயகமுறைப்படி இந்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. தமிழகம் அமைதி பூங்கவாக உள்ளது, சட்ட ஒழுங்கு சீராக பாரமரிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அந்த துறை அமைச்சர் தெரிவித்துள்ளார், காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரித்து உள்ளது, மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டது, தற்போது அது சரியாகிவிட்டது. ஜீ.எஸ்டி. கொண்டு வந்த போது எந்த மாநில அரசையும் கலந்து ஆலோசிக்க வில்லை, எந்த பொருளையும் ஜீ.எஸ்.டிக்குள் கொண்டு வருவது மத்தியரசின் கையில் தான் உள்ளது.மக்கள் விரோத பெட்ரோல்,டீசல் விலை உயர்வின் எதிர்ப்பினை சாமளிக்க முடியமால் மாநில அரசுகள் மீது பழி போடுகின்றனர். தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேர தூது விட்டு கொண்டு இருக்கிறார். இங்கிருந்து சரியான பதில் இல்லை, எனவே அதிமுகவில் சேர காரணம் தேடுகிறார். அதனால் தான் தேர்தல் குறித்து சவால் விடுத்து, அதில் தோற்கும் போது தானகவே அதிமுகவில் சேர வழி தேடுகிறார் என்றார்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad