Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே நீர்த்தேக்கத்தை போலியாக தூர் வருவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது எப்போதும் வென்றான் கிராமம். இந்த கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்கம் அமைந்துள்ளது 



    இந்த நீர்த்தேக்கத்தில் பல்வேறு பகுதி கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திவந்தனர் தற்போது குடி மராமத்து பணி என்ற பெயரில் ஒப்பந்தக்காரர்களை கொண்டு நடைபெறும் போலியான கண்துடைப்பு பணியை தடை செய்ய வலியுறுத்தியும் குடிமராமத்து பணியை அந்தப் பகுதி விவசாயிகள் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மற்றும் மாநாடு நடைபெற்றது. 


    இந்த மாநாட்டில் விவசாயிகளுக்கு தேவையான கரம்பை மற்றும் சரல் மண்ணை எடுக்க இடையூறாக இருக்கும் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாய நிலங்களில் உள்ள பழுதான கிணறுகளை பராமரிப்பு செய்ய விவசாயிகளுக்கு முழு மானியத்தோடு அரசு கடன் வழங்க வேண்டும் எனவும் கல்லாற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் காட்டு நாயக்கன் பட்டி எப்போதும் வென்றான் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad