• சற்று முன்

    கோவில்பட்டியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்



    கோவில்பட்டியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை



    தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக கோவில்பட்டி உள்ளது வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவில்பட்டியில் வாகனங்களின் அதிகரிப்பு காரணமாக சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது இதற்கு முக்கிய காரணமாக சாலையோர கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆக்கிரமிப்புகள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனை தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அக்~;யா அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் காஜா முகைதீன் நகரமைப்பு அலுவலர் சந்தான சேகர் ந.ஆய்வாளர் குமார் ந.ஆய்வாளர் வள்ளிராஜ் சுகாதார ஆய்வாளர் காஜா சுகாதார ஆய்வாளர்; துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்  கோவில்பட்டி பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் எனவும் தெரிவித்தனர் மேலும் கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர் அவர்களது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad