Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அடுத்த சாந்தாபுரம் ஏரியில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான சிறு மீன்கள், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி


    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சாந்தாபுரம் ஏரி 70 ஏக்கர் நிளப்பரப்பை கொண்டது.

    இந்த ஏரியின் நீர் ஆதாரமாக மழைநீரையும் பேடரப்பள்ளி ஏரியின் நீரையே நம்பி உள்ளது, இந்நிலையில், சாந்தாபுரம் ஏரியிலுள்ள சிறு மீன்கள் லட்சக்கணக்கில் இறந்து ,மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது, ஏரியில் மீன்கள் இறந்ததற்க்கான காரணம் தெரியாததால், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்,
    பேடரப்பள்ளி பகுதிகயில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன அவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக சாந்தாபுரம் ஏரியில் கலக்கப்படுவதாகவும், பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்க்கொண்டாத தெரியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர் நச்சு கலந்த அமில கழிவு நீரை, இரவு நேரங்களில் ஏரியில் செலுத்துவதாகவும், சில தொழிற்சாலைகளோ டிராக்டர்கள் மூலமாக கழிவு நீரை வெளியேற்றுகின்றனர், கால்நடைகள் நீர் குடிக்க அஞ்சும வகையில் ஏரியின் நீர் நிறம் மாசடைந்து காட்சியளிக்கிறது, எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்க்கொண்டு மீன்கள் இறந்ததற்க்கான காரணத்தையும், கழிவு நீர் கலக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : ஓசூர் - சி. முருகன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad