Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற உறியடி திருவிழா – அசத்திய பள்ளி குழந்தைகள்



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு தனியார் பள்ளியில் நடைபெற்ற உறியடி திருவிழாவில் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டு உறியை அடித்து அசத்தினர். மேலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதா வேடமணிந்து கோலட்டம் ஆடி பார்வையாளர்களின் கவனத்தினையும் ஈர்த்தனர்.



    தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமிதிதியில் மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இம்மண்ணுலகத்தில் அவதரித்தார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை, இந்தநாளை கோகுலாஷ்டமியாக இந்து மக்கள் கடைபிடித்து கொண்டாடடி வருகின்றனர். நாளை கோகுலாஷ்டமி கொண்டாடப்படுவுள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கண்ணா மெட்ரிக்குலேசன் பள்ளியில் உறியடி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விழாவில் பள்ளிக்குழந்தைகள் உறியடித்து வருகின்றனர். விழாவினை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பள்ளிகுழந்தைகள் கிருஷ்ணன், ராதா வேடமணிந்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.ஸ்ரீ கிருஷ்ணர், ராதை பற்றிய பாடல்களுக்கு பள்ளி குழந்தைகள் கோலாட்டத்துடன் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து உறியடிக்கும் திருவிழா நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கயிற்றினால் கட்டப்பட்டு மேலும், கீழும் இழுக்கப்பட்ட உறியை அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சியும், அவர்களின் குறும்புத்தனமும் நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவையும், அழகிய தருணமாகவும் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது. நிகழ்ச்சியில் முடிவில் இரு குழந்தைகள் ஒரு சேர உறியடித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றனர். விழாவில் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad