Header Ads

  • சற்று முன்

    டி.டி.வி.தினகரன் விரக்தியில் பேசுகிறார் - கமல் அரசியல் அனுபவம் இல்லாமல் பேசுகிறார் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ



    டி.டி.விரக்தியில் பேசி வருவதாகவும், கமல் அரசியல் அனுபவம் இல்லமாலும், ஆதராம் இல்லமால் பேசி வருவதாகவும், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் இந்திய அஞ்சல் துறையின் பேமெண்டஸ் பேங்க் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய அஞ்சல் துறையின் பேமெண்டஸ் வங்கி தலைமை தபால் அலுவலகம் உள்பட 5 இடங்களில் தொடங்கப்படுகிறது. இதன் தொடக்க விழா கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு வங்கி சேவையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாமன்னர் புலித்தேவர் நினைவு மண்டபம் புணரமைப்பு செய்ய 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக அவரது தந்தை கூறியுள்ளது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும், நடிகர் கமல் அரசியல் அனுபவம் இல்லாமல் பேசுகிறார். ஊழல் நடைபெற்றது என்றால் எந்த துறையில் நடைபெற்றது என்று கூற வேண்டும், கமல்ஹாசன் இதுவரை வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார். எந்த குற்றச்சாட்டு சொல்லும் போது ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், அரசியலுக்கு அவர் தயாராகி விட்டால் எதையும் சொல்லும் முன் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், அவ்வாறு சொல்லமால் நேரத்தினை வீணாக்கி கொண்டு இருக்கிறார்.எது குடும்ப ஆட்சி என்று நாட்டுமக்களுக்கு தெரியும்,டி.டி.வி தினகரன் அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அந்த விரக்தியில் பேசுகிறார்.



    தேர்தல் வந்தால் எல்லாரும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறுவர்கள், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற 11 தேர்தல்களில் 9 தேர்தல்களில் அதிமுக தான் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்றது, எனவே தற்போதும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம், திருவாரூரில் திமுக தலைவர் நின்றதால் வெற்றி பெற்றார்கள், ஆனால் இடைத்தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad