கோவில்பட்டியில் தனியார் லாட்ஜில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை
கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் என்ற ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் லாடஜில் தூக்கிட்டு தற்கொலை – மனக்குழப்பம், இயற்கையுடன் வாழ போவதாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவசை; சேர்ந்த ஆயிர ராமன் என்பவரது மகன் காளிதாஸ். இவர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், ரித்திகா என்ற 5வயது மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் சின்ன வேலை காரணமாக வெளியூர் செல்வதாக வீட்டில் கூறி வீட்டுச்சென்றுள்ளார். ஆனால் வெளியூர் செல்லமால் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நண்பரின் உதவியுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். தனது நண்பர்களிடம் மனகுழப்பத்தில் இருப்பதாகவும், தனிமையில் இருக்க விரும்பிய காரணத்தினால் அறை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் லாட்ஜில் உள்ள ஊழியர்கள் இவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்து, கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையெடுத்து போலீசார் விரைந்து வந்து மாற்றுசாவி மூலமாக அறையினை திறந்து பார்த்த போது, அறையில் காளிதாஸ் தூக்கி தொங்கி கொண்டு இருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அருகில் கிடந்த நோட் ஒன்றினை எடுத்து பார்த்த போது, தனக்கு வாழபிடிக்கவில்லை என்றும், பணம் பிரச்சினை கிடையாது, மனக்குழப்பதான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார். இதையெடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை