சார் ஆட்சியர் அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் மாற்றக்கோரி பழனி தாராபுரம் சாலையில் காத்திருப்பு போராட்டம்
பழனியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நுருல்ஷீதா என்கிற பகத்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்த சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காத்திருப்பு போராட்டம் என்ற பெயரில் சாலை மறியல் வருவாய்த்துறை காவல்துறையிடம் வாக்குவாதம் தள்ளுமுள்ளு பதட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிப்பு.
பழனியில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் நுருல்ஷூதா என்கிற பொதுவாழ்க்கைக்கு பாதிக்குபடி போராட்டத்தை தூண்டுவதாகக் கூறி கடந்த வாரத்தில் சார் ஆட்சியர் மீதும் அலுவலகத்திலும் அனுமதியின்றி போராட்டத்தை தூண்டியதால் சார் ஆட்சியரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமினில் வெளிவந்தார்.
மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நம்பிராஜன் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் சார் ஆட்சியர் அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் மாற்றக் கோரியும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் பழனி தாராபுரம் சாலையில் காத்திருப்பு போராட்டம் என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து அனைத்து பகுதியிலும் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டதால் பக்தர்களும் பொதுமக்களும் அவதிக்குள்ளாயினர் பழனி காவல்துறை ஏடிஎஸ்பி சுகாசினி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் மாற்றுத்திறனாளிகள் பல இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸதம்பிப்பு. இதனால் நோயாளிகள் பக்தர்கள் பொதுமக்கள் ஒரு மணி நேரம் வெறும் அவதிக்குள்ளாகினர் பழனி தாசில்தார் சரவணக்குமார் ஏடிஎஸ்பி சுஹாசினி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியபோது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் என்று மாநில பொதுச் செயலாளர் நடராஜன் பேட்டியளித்துள்ளார் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வழக்கறிஞர் ராஜமாணிக்கம் நகரச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் வாக்குவாதம் போலீஸாரிடம் தள்ளுமுள்ளு செய்து கொண்டிருப்பதால் பழனி நகரமே பதட்டத்தில் உள்ளது சார் ஆட்சியர் அருண்ராஜ் ஐ ஏ எஸ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் எந்தவிதமான கலவரமாக மாறும் பயத்தில் பொதுமக்கள் உள்ளனர்...
செய்தியாளர்
பழனி சரவணக்குமார்...
கருத்துகள் இல்லை