மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையனை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது.
விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(என்ற) புறாமணி(21), இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்
இவர் கடந்த 12 ம் தேதி இரவு வீட்டில் இருந்து கிளம்பியவர் வீடு திரும்பவில்லை 13ம் தேதி மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் மார்கெட் அருகே உள்ள காலி இடத்தில் வெட்டப்பட்டு மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நெற்குன்றத்தை சேர்ந்த சுல்தான்(23), நாகராஜ் என்ற நாடி நாகராஜ்(20), மதுரவாயலை சேர்ந்த அரவிந்த்(23), நும்பல் சேர்ந்த அருண் (25), வளசரவாக்கத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற கோழி பாபு(25), விக்கி ஆகிய 6 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் : குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள தக்காளி பிரபா எனபவருக்கும் நேதாஜி ஆகிய இரண்டு கோஷ்டிக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு கோஷ்டியினரும் அடித்துக்கொண்டனர். மேலும் தக்காளி பிரபா கைதாவதற்கு நேதாஜி முக்கிய காரனமாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி தக்காளி பிரபா ஆட்கள் செய்யும் குற்ற சம்பவங்களை போலீசிடம் கூறி விடுவார். இதனால் தக்காளி பிரபா ஆட்களுக்கு மிகுந்த இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் நேதாஜியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். மேலும் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் இந்த கும்பலை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனை முதலில் தீர்த்துக்கட்ட முடிவு செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். மணிகண்டன் அங்கு வந்ததும் மறைந்திருந்த 6 பேரும் சேர்ந்து கொண்டு மணிகண்டனை விரட்டி சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 6 பேரிடமும் தீவிர விசாரணை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
எமது செய்தியாளர் : ரேவந்த் குமார்
கருத்துகள் இல்லை