கோவில்பட்டி அருகே கயத்தார் கார் மோதி அடையாளம் தெரியாத பெண் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ராஜாபுதுக்குடி பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 35வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் கயத்தார் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணிக்கத்தினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எமது செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை