Header Ads

  • சற்று முன்

    தவறான மருத்துவத்தால் உயிர் பலி ! பெறோர்கள் உடலை வாங்க மறுப்பு



    கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள தனியார்  மருத்துவனையில் கூசாலிபட்டியை சேர்ந்த சங்கையா – கற்பகம் தம்பதியின் ஒன்றை வயது குழந்தை சதிஸ்குமாருக்கு காய்ச்சலுக்கு போட்ட ஊசியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சதிஸ்குமர்  சிகிச்சை பலன் இல்லமால் உயிரிழந்தார் . குழந்தை உயிரிழப்புக்கு காரணமான தனியர்  மருத்துவமனை மருத்துவரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்று சதிஸ்குமார்  உறிவினர்கள் தொவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூசாலிபட்டியை சேர்ந்த சங்கையா – கற்பகம் தம்பதியின் குழந்தை சதிஸ்குமார் . சங்கையா மிக்ர் ; வியாபாரம் செய்து வருகிறார் . கடந்த 6ந்தேதி ஒன்றை வயது குழந்தையான சதிஸ்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சங்கையா, குழந்தையை அரசு மருத்துவமனையில் மருத்துவரிடம் காண்பித்து விட்டு சென்றுள்ளார் . இருப்பினும் தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்த காரணத்தினால் கடலையூர்  சாலையில் உள்ள மீனாட்சி கிளினிக் சென்று அங்கிருந்த மருத்துவர்  கருப்பசாமியிடம் காண்பித்துள்ளார் , குழந்தை பரிசோதனை செய்து விட்டு ஊசி போட்டு மருந்து,மாத்திரை கொடுத்துள்ளார் . ஊசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் உடலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. 


    இதற்கு மருத்துவர்  கருப்பசாமி, ஆயில்மெண்ட கொடுத்துள்ளர் . அதனை போட்டால் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார் . ஆயில்மெண்ட் போட்ட பின்பு வீக்கம் குறையாத காரணத்தினால் சங்கையா குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார் டுள்ளதால், அது செப்டிக் ஆகிவிட்டதாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர்  ஆனால் இன்று காலையில் சிகிச்சை பலன் இல்லமால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தனது குழந்தை இறப்புக்கு மருத்துவர்  கருப்பசாமி போட்ட ஊசி தான் காரணம் என்று சங்கையா கிழக்கு காவல் நிலையத்தி;ல் புகார்  தெரிவித்துள்ளார் . மேலும் மருத்துவர் கருப்பசாமியை கைது செய்யும் வரை உடலை வாங்கபோவதில்லை என்று தெரிவித்துள்ளார் . இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார; வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    எமது செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad