Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அடுத்த அடவனப்பள்ளி அருகே டிப்பர் லாரி மோதியதில் சம்பவயிடத்திலே ஒருவர் பலி, ஊர் பொது மக்கள் சாலை மறியல்


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அடவனப்பள்ளி அருகே டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலி.

    விபத்தில் பலியானவர் அடவனப்பள்ளி அருகே உள்ள தேவ்செட்ப்பள்ளி சேர்ந்த நரசிம்மன் வயது 32 இவர் கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் நேரத்தில் அடவனப்பள்ளி என்ற இடத்தில் எதிர்பாராத விதத்தில் டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நரசிம்மன் பலியானார்,தகவலை அறிந்த நரசிம்மன் குடும்பத்தாரும் மற்றும் தேவ்செட்டிபள்ளி ஊர் பொதுமக்களும் விபத்து நடந்த பகுதிக்கு வந்து இறந்து கிடந்த நரசிம்மன் உடலை அப்புறப்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    தகவலறிந்து வந்த பாகலூர் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்று வந்தன இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் காணப்பட்டன, மேலும் சம்பவ இடத்துக்கு பாகலூர் பொறுப்பு ஆய்வாளர் முருகன் அவர்களும் மற்றும் ஓசூர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி அவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர் அதன் பிறகு தேங்செட்டிபள்ளி ஊர் பொதுமக்கள் இடையே கோரிக்கையை கேட்டறிந்தனர்

    அப்போது ஊர் பொதுமக்கள்  அந்த பகுதி முழுவதும் கல்குவாரிகள் நிறைந்தவையாக உள்ளன நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகள் இடைவிடாத வேகமாக வந்து செல்கின்றன இதனால் கிராமங்கள் மாசு அடைந்தும் சுகாதாரமற்ற நிலையில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏர்ப்படுகின்றன ஆகையால் இங்குள்ள குவாரிகளை அகற்றப்பட வேண்டும் எனவும் மேலும் இறந்த நரசிம்மன் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்தனர்

    இதை ஏற்றுக் கொண்டார் வட்டாட்சியர் முத்துப்பாண்டி இறந்த நரசிம்மனுக்கு தகுந்த இழப்பீடு வழங்க படும் என உத்தரவாதம் வழங்கினார் மேலும் ஊர் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைப்பதாகவும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் பிறகு அவர்களை சம்மதிக்க வைத்து நரசிம்மன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    இந்த சம்பவத்தினால் இப்பகுதி பில் சுமார் ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பதட்டம் நிலவியது.

    எமது செய்தியாளர் - ஓசூர் - சி.முருகன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad