ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயற்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் வனத்துறையின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக ராமக்கா பணியாற்றி வருகிறார். இவர் நேற்று 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி உள்ளார். அப்போது மாணவிகளுக்கு பாடத்தில் இருந்து சில கேள்விகளை கொடுத்து அதற்கான விடைகளை எழுத கூறி உள்ளார். இதில் மாணவிகள் சிந்து, ராஜகுமாரி, காவ்யா ஆகிய மூன்று மாணவிகள் ஆசிரியை கொடுத்த கேள்விகளுக்கு விடை எழுதாமலும், ஆசிரியைக்கு சொல்லாமல் வீடிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த அம்மாணவிகளை ஆசிரியை ராமக்கா அழைத்து கண்டித்தும், தலைமை ஆசிரியை பார்த்து அவரிடம் நடந்தவற்றை கூறி மீண்டும் வகுப்புக்கு வாருங்கள் என்று அனுப்பிவிட்டார். இதை கேட்ட மூன்று மாணவிகளும் பள்ளிக்கு வெளியே வந்து மலைகளில் கிடைக்கும் அரளி விதைகளை சாப்பிட்டுள்ளனர். இதில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை பொதுமக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மூன்று மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஜமுனமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பகுதியில் மாணவிகளின் இந்த செயலால் ஜமுனமரத்தூர் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் - சரவணன்
செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube chaneel லை பார்க்கவும்.
கருத்துகள் இல்லை