Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்காததால் நியாயவிலைக் கடையில் அமர்ந்து பயின்று வரும் குழந்தைகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகாவில் மலைகிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்காததால் பகுதி நேரம் நியாயவிலைக் கடையில் அமர்ந்து  குழைந்தைகள்  பயின்று வருகின்றனர். இதனால் குழந்தைகள்  கடும் அவதிப்படுகிறார்கள்.
    ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உள்பட்ட தொளுவபெட்டா கிராமம். மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுக்கு மேலாக அங்கன்வாடி மையம் பகுதி நேரம் நியாயவிலைக் கடையில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முரையேற சுற்று சுழல் பகுதியில்  பயின்று வருகின்றனர். 
    மேலும் ரேஷன் கடை இயங்கும்போது, அங்கன்வாடி மையமும் இயங்குகிறது. அங்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள், சாக்கு மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். போதிய காற்றோட்டம் இல்லாமல் வேதனைப்படுகிறார்கள். இதன்மூலம் இருமல், சளி உள்ளிட்டவையால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
    இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு இந்த அங்கன்வாடி மையத்துக்கு ரூ.8 லட்சம் செலவில் புதிய கட்டிடம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் திறப்பு விழா நடைபெறாததால் இந்த கட்டிடம் ஒரு காட்சி பொருளாக காணப்படுகிறது. எனவே புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அதில் அங்கன்வாடி மையத்தை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர் : கிருஷ்ணகிரி - சி.முருகன்

    வாட்ச் nms today youtube chaneel பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad