ஆசிரிய தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் அரசு பள்ளியை தத்து எடுத்த முன்னாள் மாணவன் சிவா
இந்தியா முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படும் விழா டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னால் பள்ளி மாணவனும் பாமக பிரமுகர் தொழிலதிபர் ஏ.பி. சிவா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய தொழில்அதிபர் சிவா.
தமிழ் நாட்டில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும். அதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நாம் அரசை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் இந்த பள்ளியில் தான் பயின்று வந்த முன்னால் மாணவன். இது எனது பள்ளி எனது நீண்ட நாள் கனவு அரசு பள்ளியை தத்து எடுக்க வேண்டும் என்பது அதற்காக நான் இதுவரை திருப்பத்தூர் சுற்றியுள்ள 10 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து உள்ளேன். இந்த பள்ளிக்காக நான் இதுவரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த போதிலும் எனது மணம் நிறைவு பெறவில்லை. இந்நிலையில் இன்று ஆசிரியர் தினம் இந்த தினத்தில் நாம் படித்த பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் நான் படித்த அரசு நடுநிலைப் பள்ளியை தத்து எடுத்துக்கொள்கிறேன். இனி இந்த பள்ளிக்கு என்னென்ன அடிப்படை தேவைகள் என்பதினை அறிந்து அதை அனைத்து நான் முழுமையாக நிறைவேற்றுவேன் என கூறினார். இதில் பொதுமக்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை