தனியார் உணவு விடுதியில் பாரம்பரிய இயற்கை உணவு தயாரிப்பு பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தங்கும் விடுதியில் இயற்கை பாரம்பரிய உணவுகளை தயார் செய்து காட்சிக்காக வைக்கப்பட்டன, அதனை இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று ரசித்து ருசித்து சாப்பிட்டனர் உணவு விடுதியில் கொங்கு நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் தயார் செய்து காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தனர் இத்தகைய உணவுகளை உண்பதற்கு இளைஞர்கள் குடும்பத்துடன் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர் உணவு வகைகளான இனிப்பு வகைகளில் தேங்காய் பர்பி இனிப்பு முறுக்கு உளுந்து கஞ்சி வாழைத்தண்டு பொரியல் வாழைப்பூ கூட்டு ,அகத்திக்கீரை மற்றும் நான் வெஜிடேரியன் நாட்டுக்கோழி பிரியாணி மற்றும் ஒகேனக்கல் ஆற்றின் மீன் வகைகள் என 60-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்து இயற்கையான தேங்காய் ஓலையால் பின்னப்பட்ட குடில் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டது இதனை பார்த்து இப்பகுதி மக்கள் ரசித்து ருசித்து மகிழ்ந்தனர் தற்போது உள்ள குழந்தைகளுக்கு பெரியோர்கள் உண்ட உணவுகளை தெரியப்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கும் இயற்கை உணவுகளைப் பற்றி எடுத்துக் கூறி சாப்பிட வைத்தனர் குழந்தைகளும் ஆர்வமாக உண்டு மகிழ்ந்தனர் இதுபோல் பாரம்பரிய இயற்கை உணவுகளை நாங்கள் வீட்டில் செய்வது கூட சிரமம் இருக்கும் ஆனால் இதுபோன்ற உணவு விடுதிகளில் தயார் செய்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை