கோவில்பட்டியில் பைக் திருடியவரை போலீசில் பிடித்து கொடுத்த பொது மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி தாசன் தெரு பகுதியில் நின்று இருந்த பைக்கினை திருடிச்சென்ற சங்கரன்கோவில் பெரிய கோவிலன் குளத்தினை சேர்ந்த மணிகண்டன் என்பவரை அப்பகுதி பொது மக்களை சுற்றி வளைத்து, போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மணிகண்டனை கைது செய்து, திருடி பைக்கினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னைதெரசா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் சுகிர்தா, இவர் பாரதி தாசன் தெருவில் உள்ள ஹெல்த்ஹேர் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வருகிறது. சுகிர்தா வழக்கமாக தனது எக்சல் பைக்கில் வேலைக்கு வருவது வழக்கம். இன்றும் வழக்கம் போல தனது பைக்கில் வேலைக்கு வந்துள்ளார் தனது பைக்கினை கடையின் அருகே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் சுகிர்தாவின் பைக்கினை எடுத்துச் செல்லுவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
வண்ணாவூரணி தெரு பகுதிக்கு சென்றது பொது மக்கள் அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து, விசாரித்த போது பைக்கினை போட்டு விட்டு தப்பியோட முயன்றுள்ளார்.ஆனால் பொது மக்கள் அவரை பிடித்து கொண்டதால், அந்த மர்ம நபரின் முயற்சி தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து பொது மக்கள் இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியகோவிலன்குளத்தினை சேர்ந்த சங்கையா மகன் மணிகண்டன் என்பதும், பைக்கினை திருடியதும் தெரிய வந்தது. இதன் பின்பு போலீசார் மணிகண்டனை கைது செய்ததது மட்டுமின்றி, பைக்கினை பறிமுதல் செய்தனர். மணிகண்டனுக்கு வேறு யாரவது திருட்டி வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பாரதிதாசன் மற்றும் வண்ணாவூரணி தெரு பகுதியில் பைக்குகள் திருடு போய் வந்த நிலையில் இன்று பொது மக்களே திருடனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எமது செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை