புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள வில்லாரோடை கிராமத்தை ஒட்டியுள்ள கோரையாற்றில் நேற்று இரவு சிலர் லாரிகளில் மணல் கடத்துவதாக விராலிமலை தாசில்தார் பார்த்திபனுக்கு தகவல் சென்றது.

இதைத்தொடர்ந்து வருவாய் துறை அலுவலர்களை அழைத்துக் கொண்டு வாகனத்தில் விராலிமலையில் இருந்து கீரனூர் சாலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சென்று கொண்டிருந்தார் அப்போது பூமரம் குளவாய்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையே சென்ற போது வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே தாசில்தார் பார்த்திபன் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக டிரைவர் உட்பட மூன்று பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விராலிமலை மருத்துவமனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிக்கிசை அளிக்கப்பட்டு வருகிறது.
எமது செய்தியாளர் : புதுக்கோட்டை - சண்முகநாதன்
கருத்துகள் இல்லை