Header Ads

  • சற்று முன்

    என்னை கொல்லாதே .... ஆசிரியர் நீலம் மூன் இதன் முன் தொடர்ச்சி ( 23.09.18)



    நிலா நீங்க பின் வழியாக வீட்டுக்கு போங்க தேவை இல்லாமல் சிக்கலை இழுக்க வேண்டாம்னு தோணுது. காந்தனுக்கும் பிடிக்கல. பிறகு சந்திப்போம்.      குற்றவாளி அருகிலே உளவு பார்க்கிறான். நீலேஷ், இந்த கால்தடயம் பெரிய எவிடென்ஸ் போட்டோ  எடுங்க என்னுடையதிலும் எடுத்துக்கிறேன். 

    பல கோணங்களில் எடுத்து கொண்டு  அந்த இடத்தை பெரிய தகரத்தால் மூடினாள்.  நீலேஷ் உதவி தேவை எனில் உடனடியாக தொடர்பு கொள்ளுங்க காலநேரமும் சங்கோஜமும் பட வேண்டாம்.எனக் கூறிச் சென்றாள்.          காந்தன்  எதற்கு சினம் கொள்ளனும், பாவம் நிலா என யோசித்து வீட்டிற்குள் சென்றான். காந்திமதி கணவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள். அப்போ காந்தனுக்கு, பொண்ணு பார்த்து வெச்சுறிக்கிங்க பெத்தவ எனக்குத் தெரியாது.யாரோட சேர்ந்து போனீங்க.   பொறு ஏதேச்சியா நடந்தது ராகினி........  போதுங்க  உங்க கள்ளத்தனம் தலைக்கு மேலே வளர்ந்த புள்ளை இருக்கும்போது என்உள்ளம் கொதிக்குது கடவுளா கண்ணு திறந்தாரு. 



    அன்னம் ரொம்ப தப்பா பேசுரே அந்த கடவுளுக்குக் கூட அடுக்காது என்னை சந்தேகப்படுறீயா உனக்கு புத்தி கேட்டு போச்சியா  அவ செத்தது  ஆனந்தமா       ஆமாம்.  நீங்களும்,  அவளும் கடைசியாக அடிச்ச கூத்து  அப்பப்பா கொஞ்சமா நஞ்சமா சகிக்கல சாமீ காதுகளை பொத்திக் கொண்டு அலட்டினாள்.    ஒ ஹோ...இந்த கோவத்துல  அரவிந்த்திடம் தூக்க  மாத்திரை வாங்கி கொன்னுட்டே  அப்படிதானே. அன்னலட்சுமிக்கு வியர்வை ஆறாக பெருக  ஐயோ  நானு மாத்திரைம் கொடுக்கல சாகவும் அடிக்கல சாமீ யாராவது கேட்க போறாங்க  என புலம்பினாள். அதிர்ச்சியில் கல்லாக  நின்ற நீலேஷ் உடனே உள்ளே செல்வதா வேண்டாமா என வியப்பில் திணறினான். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல  குற்றவாளியை   வெளியே  தேடினால் வீட்டுல இருக்குரவங்கலேவா குழம்பினான்.      அதே நேரம் காந்தன் அம்மா என்று குரல் கொடுத்தான். மகன் வந்ததால் அத்துடன் பேச்சு நின்றது.  தலை பயங்கராம வலிக்குது சூடா காபி கிடைக்குமா,  இதோ கொண்டு வர்றேன்னு அடுப்பறைக்குள் உள்ளே சென்றாள். நடராஜன் மகனிடம் திருமண பேச்சை எடுத்தார் அப்பா  தயவுசெய்துஇதைப்பற்றி பேசாதிங்க இப்போ இருக்குற சூழலுக்கு இது ஒண்ணுதான் குறை.சலிப்பாக பதில் அளித்தான். காந்தா இந்த இடத்தை ராகினி ஆன்டி ஏற்பாடு செய்தது. பாவம் உச்சு கொட்டினார். மகுடிக்கு மயங்கும் பாம்பாக தலை சாய்த்தான் காந்தன்.   

    உள்ளே  நுழைந்த நீலேஷ்  நண்பனுக்கு வாழ்த்து தெரிவித்தான்.   அடுத்த நாள் மாலை பெண் பார்க்கும் படலத்திற்கு புறப்பட்டனர். அன்னலட்சுமிக்கு வெறுப்பை வெளிக் காட்டாமல் மகனுக்காக பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழல்.மணப்பெண்ணை அழைத்து வந்து அமர வைத்ததும் உடம்பு சில்லிட்டு  உள்ளங் கையில் பிசுபிசு வென ஈரம் . மெல்ல நண்பன் கரம் பற்றினான் தாங்க்ஸ்டா மாப்பிள்ள. மனசுக்கு பிடித்தவள். ஆசைப்பட்டேன். நினைக்கவில்லை. இவளைத்தான்   பெண்பார்க்க வருவேன் என்று .ராகினி ஆன்டி இறந்தும் நான் விரும்பியதை தந்து விட்டாள். உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது. பெரியவர் ஒருவர், ஏம்பா இரண்டு வீட்டாருக்கும் பிடிச்சு இருக்குல்ல எதுக்கு தாமதம் தட்டை மாத்தி நிச்சயதார்த்தம் தேதி குறிச்சுடுங்க என்றார். வர்ற வெள்ளிக்கிழமை ஒப்புத்தாம்பூலம் வெச்சுக்கலாம் என்ன சொல்றீங்க ஒ.கே  நிறுத்துங்க அனைவரும் சத்தம் வந்த வாசலை நோக்கினர் இழவு விழுந்து வாரம் கூட ஆகல நடந்தது கொலையா இயற்கை மரணமா தெரியுமா குலோப்ஜாமு தூக்கும் மோதிரம் என்னாச்சு. மோதிரத்துக்குள் பல இரகசியங்கள் புதைத்து உள்ளது. அவன்  உயிரோடு இருப்பானா பாருங்க கத்தினான். காந்தனும், நீலேஷும் டேய் இவன் மெடிக்கல் ஷாப்பில் பார்த்தவன். இவனுக்கு ஆன்டி பத்திய செய்தி தெரியும் போல கேட்கலாம் என எழுந்தனர். சொன்னவன் ஓட அவனை விரட்ட டேய் நில்லுங்க நில்லுங்க..............எதிரே........ 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad