Header Ads

  • சற்று முன்

    ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனையை எதிர்த்தும் மதிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு போரட்டம் நடைபெற்றது.


    ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்வதற்கு மத்தியரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் இன்று மருந்துகடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மத்திரயசு ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்ய கோரி போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 120 மருந்துகடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.


    கோவில்பட்டி,விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார், கழுகுமலை, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்தே மருந்து கடைகள் அடைக்கப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி இருப்பதால், காய்ச்சல், இருமல் ஆகியவை அதிகமாக காணப்படுவதால், மக்கள் அதிகளவில் மருந்துக்கடைகளை நாடிவருகின்றனர்.இன்று கடைகள் அடைக்கப்பட்டதால் மருந்துகள் வாங்க முடியமால் பொது மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜான்பிரிட்டோ செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆன்லைன் மருந்து வணிகத்தினால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புக்கள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், மத்தியரசு ஆன்லை மருந்து வணிகத்தினை தடை செய்ய கோரியும் நாடு முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 35 ஆயிரம் கடைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 420 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக பொது மக்கள் மருந்துகள் வாங்கும் போது அதனுடை பாதுகாப்பு தன்மை கேள்விகுறியான ஒன்று, எனவே தான் ஆன்லைன் மருந்து வணிகத்தினை மத்தியரசு தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம், மத்தியரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் டிசம்பர் மாதம் 3ந்தேதி முதல் 6ந்தேதி வரை 3நாள்கள் மாநிலம்முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம், கோவில்பட்டி தாலூகா செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், காமராஜ், ராமசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad