குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை உடனடியாக மீட்க பகுதி மக்கள் கோரிக்கை


காஞ்சிபுரம் மாவட்டம் வடகால் பகுதியில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்துள்ள 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம், வடகால் ஆகிய கிராமங்களில் சுமார் 200 கோடி மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் வானூர்த்தி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வடகால் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் அரசு இடத்தை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் குடோன் கட்டி அதை வாடகைக்கும் விட்டுள்ளனர். எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்டு கிராம பயன் பாட்டிற்கு சமுதாய நலக்கூடம், பூங்கா ஆகியவற்றை அமைத்திட வேண்டும் என வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எமது செய்தியாளர் : ஜெயம் 

கருத்துரையிடுக

புதியது பழையவை