Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது



    தேசிய காசநோய் தடுப்பு திட்டம் கடம்பூர் காசநோய் அலகின் சார்பாக
    கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது 


    முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் அனைவரையும் வரேவேற்று பேசினார்.

    மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் Dr.கமலவாசன் காசநோய் பற்றியும் சிகிச்சை முறை பற்றி யும் பேசினார் மாதம் தோறும் அரசு வழங்கும் ஊட்டச்சத்து தொகை பற்றியும் எடுத்துக் கூறினார் நோயாளிகள்  புரதம் சார்ந்த உணவுகள்  தினமும்  உணவில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு Dr.கமலவாசன் இலவச சத்துணவு வழங்கினார் மேலும் கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக காசநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினமும் இலவச சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.  இந் நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் சுகாதார பார்வையாளர் திவ்யா, மகேஸ், ஆய்வக  நுட்பனர் ராமலட்சுமிஆகியோர் கலந்து கொண்டனர்

    முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad