Header Ads

  • சற்று முன்

    திருவாடானை அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் இடிபடும் நிலையில் அரசு கட்டிடம்



    திருவாடானை அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு கிராமத்தில் நடுநிலைபள்ளியும், உயர் நிலைப் பள்ளி கட்டிடம் இடிபடும் நிலையில் உள்ளது.


    திருவாடானை அருகே புல்லக்கடம்பன் பஞசாயத்திற்குட்பட்ட சோழகன்பேட்டை கிராமத்தில் அரசு  நடுநிலைபள்ளியும், உயர் நிலைப்பள்ளிஉள்ளது. இந்த பள்ளி பல வருடங்களாக இயங்கிவருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட இடம் ஊரைச் சேர்ந்த சுலைகா பீவி(50) எனபவருக்கு பாத்தியமான இடம் என்று திருவாடானை நீதிமன்றத்தில் 2003ல் சிவில் வழக்கு தொடர்ந்தார். அந்த சிவில் வழக்கில் மாவட்ட ஆட்சியர், திருவாடானை தாசில்தார். திருவாடானை பி.டி.ஓ. ஆகியோர்களை சேர்த்திருந்தார். ஆனால் அதிகாரிகள் யாரும் ஆஜரா கமல் அலட்சியமாக இருந்த நிலையில் 2009ம் வருடம் சுலை கா பீவிக்கு ஆதரவாத தீர்ப்பானது.

    அந்த தீர்ப்பில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்து அந்த மனுவில் அரசு தரப்பில் ஆகியவை சேர்க்கப்பட்டு பள்ளிக்கூடம் இருக்குமிடத்தை மனுதாரர் வசம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் 2017இல் உத்தரவானது அந்த உத்தரவின் பேரில் நீதிமன்றம் அமீனா வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு சம்மன் அனுப்பி இருந்தார் அரசு பள்ளிக் கூடம் இடிக்கப்படும் உள்ளது என்ற தகவல் அறிந்த கிராம மக்கள் எடுக்கவிடாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர் மேலும் மேற்படி வழக்கில் எங்களை தரப்பாக சேர்க்க வேண்டும் என்று திருவாடானை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் மனு நீதிபதி பால முருகன் முன்பு விசாரணைக்கு உள்ளது இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த வழக்கில் அதிகாரிகள் தரப்பில் வழக்கில் ஆஜராகி வாதம் செய்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது இதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று தெரிவித்தார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad