தெலுங்கான சட்ட சபை கலைக்கப்பட்டது
தெலங்கானா அரசை கலைக்கும் தீர்மானம் இன்று (வியாழக்கிழமை) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து அம்மாநில ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தேர்தல் நடக்கும் வரை காபந்து அரசின் பொறுப்பாளராக கே. சந்திர சேகர ராவே நீடிப்பார். தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் இன்று அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் சட்டசபையை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெலங்கானா சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை தெலங்கானா ஆளுநர் நரசிம்மனிடம் நேரில் சென்று அளித்தார் சந்திரசேகர் ராவ்.
கருத்துகள் இல்லை