காட்பாடியில் பகுதியில் தொடரும் கொள்ளை - திணறும் காட்பாடி போலீசார்.
காட்பாடி பகுதியானது தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும் முக்கிய பகுதியாக திகழ்கின்றது. அப்படி பட்ட இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களின் கைவரிசை அதிகமாகி வருகின்றது. அதனையடுத்து காட்பாடி அடுத்த கோரந்தாங்கள் லட்சுமி நகர் பகுதியில் நித்தியானந்தன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது இவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றார் இந்த நிலையில் பூட்டி இருந்த அவரது வீட்டை உடைத்து நேற்று இரவு வீட்டினுள் இருந்த மூன்று பீரோக்களையும் உடைத்து நகை பணம் திருடி சென்றுள்ளனர்.
அதேபோல் அதே பகுதியில் உள்ள புதிதாக கட்டி நான்கே மாதங்கள் ஆன தனியார் பள்ளியில் (பின்குஷன் மான்டசரி சர்வதேச பள்ளி) நேற்று இரவு சுமார் 5 லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவின் டீவியார் மற்றும் கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளைத்தடித்து சென்றுள்ளனர் இந்த இரு சம்பவங்கள் குறித்து உடனடியாக காட்பாடி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பள்ளியில் பதிவாகி இருந்த சிசிடிடி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்பாடி கோரந்தாங்கள் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையம் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமிப காலமாக காட்பாடியில் கொலை கொள்ளை செயின் பறிப்பு, இருச்சகர வாகன திருட்டு என கொள்ளையர்களின் அட்டகாசம் பொதுமக்களால் தாங்க முடியவில்லை. மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசாரும் திணறி வருகின்றனர். இதனால் காட்பாடி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலும் இருந்து வருகின்றனர். இது போன்று இனியும் நடைபெறாமல் தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியும் என்று சமுக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
செய்தியாளர் : வேலூர் - அக்னி புயல்
கருத்துகள் இல்லை