Header Ads

  • சற்று முன்

    ஆம்பூர் உணவு வங்கி சார்பில் ஆதரவேற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 200 நாட்களாக இலவசமாக உணவு வழங்கும் சேவை பொதுமக்கள் பாராட்டு.



    வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சாலையோரம் வாழும் ஆதரவேற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நாளில் ஒரு வேலையாவது உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம்பூர் உணவு வங்கி தொடங்கப்பட்டது. ஆம்பூர் மகளிர் காவல் நிலையம் எதிரே தொடங்கப்பட்ட ஆம்பூர் உணவு வங்கி நிர்வாகிகளான பாபு, பிரபுதாஸ் ஆகியோர் முதலில் தங்களுடைய சொந்த செலவில் தங்களால் முடிந்த அளவுக்கு உணவு தயாரித்து ஒரு சிலருக்கு மட்டுமே உணவு வழங்கி வந்தனர். இவர்களுடைய செயல்பாடுகளை தினமும் பார்த்த சில சமுக ஆர்வலர்கள் தாங்களும் இதற்கு உதவுகிறோம் என்று அவர்களும் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஆம்பூர் உணவு வங்கி குறித்த தகவல் நகர முழுவதும் பரவ  தொடங்கியவுடன் பலரும் தங்களுடைய பங்களிப்பை பொருளாகவும், உடல் உழைப்பாகவும் அளித்து வருகின்றனர்.

    தினமும் உணவு  தயாரித்து, அதை பெட்டலம் கட்டி எடுத்து சென்று கோயில், பள்ளிவாசல், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலில் உள்ள ஆதரவேற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என சுமார் 150 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. 

    ஆம்பூர் நகரைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் இதற்காக தினமும் காய்கறி இலவசாமாக வழங்க வருகின்றனர். பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள்களில் சமந்தப்பட்டவர்கள் நாங்கள் உணவு வழங்குகிறோம் என்று ஆம்பூர் உணவு வங்கிக்கு உதவி செய்ய முன் வருகின்றனர். சிலர் அவர்களை உணவு தயாரித்து எடுத்து சென்று உணவு வங்கியில் வழங்கி விடுகின்றனர்.
    மேலும் துணி, போர்வைகள் ஆகிய வற்றையும் சேகரித்தும் வழங்கும் சேவை கடந்த 200 நாட்களாக செய்து வருகின்றனர். பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து உணவு வங்கி செயல்பட பொதுமக்களின் உதவி தேவைபடுகிறது என ஆம்பூர் உணவு வங்கி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர் : அக்னி புயல் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad