Header Ads

  • சற்று முன்

    காரைக்குடியில், மது ஒழிப்பு போராட்ட மாணவி நந்தினிக்கு பாஜக எதிர்ப்பு.


    மாணவி நந்தினியின் அமைதிவழி பிரச்சார பயணத்தின்போது, பாஜகவினர் தகராறு செய்து, அவர்களின் பேனரை கிழித்து, ஒருமையில் பேசினர்.



    செய்தியறிந்து அங்கு கூடிய உள்ளூர் அமைபினர், பாஜகவைக் கண்டித்தும், மாணவி நந்தினிக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.  தற்போது மாணவி நந்தினி, பாஜகவின் அராஜகத்தினைக் கண்டித்து காரைக்குடி அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மாணவி நந்தினியின் பிரச்சார பதாகையின் வாசகம் சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். அது அவரின் கருத்து சுதந்திரம். அந்த கருத்தில் தவறிருப்பின் காவல்துறையில் புகார் அளிக்கலாமே தவிர, இப்படி "மயிர புடுங்குறியா... போடி... வெண்ணெய்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. காரைக்குடிவடக்கு காவல்நிலைய ஆய்வாளர் மகேஸ்வரன் 
    அவர்கள் காவல்நிலையத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றார்

    செய்தியாளர் : காரைக்குடி - எ.ஆர். சண்முக சுந்தரம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad