Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் கல்லூரி மாணவ மணவிகளுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


    திருவாடானையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க  நிறுவணம் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இணைந்து மாணவ மாணவிகளுக்கு தொழில் செய்ய ஏதுவாக தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் கல்லூரியில் நடைபெற்றது.



    திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவணம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடைபெற்றது. இந்த வழிப்புணர்வு  முகாமிற்கு வரவேற்புரையாக முனைவர் சுப்பிரமணி, அறிமுக உரையாக தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற கூடுதல் செயலாளர் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவண ஒருங்கிணைப்பாளர் டேனியல் பிரேம்நாத், நன்றியுரையாக கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை உரையாற்றினார். இந்த முகாமில் அறிமுகஉரையாற்றிய டேனியல் பிரேம்நாத் பேசுகையில் மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பு முடித்தவர்கள் என்ன தொழில் செய்ய வேண்டும் நிணைக்கிறீர்களோ அந்த தொழில் சம்மந்தமாக உரிய பயிற்சி வழங்கப்படும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். எனவே மாணவ மாணவிகள் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தால் அதற்கான பயிற்சி தொழில் தொடங்க கடன் வசதி செய்து தர ஏற்பாடுகள் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த முகாமில் முனைவர் பழனியப்பன் பேராசிரியர் செல்வம், நாட்டுநலப்பனித்திட்ட ஒருங்கினைப்பாளர் சுரேஷ் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad