கோவில்பட்டியில் மணல் லாரி – பைக் மோதல் - காதலனுடன் பைக்கில் வந்த இளம் பெண் பலி
கோவில்பட்டியில் லெட்சுமி மில் ரெயில்வே மேம்பாலத்தில் மணல் லாரி – பைக் மோதி விபத்துக்குள்ளனாதில் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள தூங்காரபட்டி ஊரைச் சேர்ந்த இளம் பெண் கன்னியம்மாள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியம்மாள் தனது காதலர் மருதாராஜ்வுடன் பைக்கில் வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் லாரி டிரைவர் வல்லநாட்டை சேர்ந்த முத்துப்பட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள எலுமிச்சைக்காய் பட்டி ஊரைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் மருதராஜ். சென்னையில் உள்ள தனியார் பைக் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தூங்காரபட்டியை சேர்ந்த வீரபாகு என்பவரது மகன் கன்னியம்மாளை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள மருதராஜ், தனது காதலி கன்னியம்மாளை அழைத்து கொண்டு பைக்கில் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். கோவில்பட்டி லெட்சுமி மில் மேம்பாலத்தில் வந்து கொண்டு இருக்கும் போது எதிரே வந்த மணல் லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் கன்னியம்மாள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருதராஜ் அதிஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மணல் லாரி டிரைவர் வல்லநாட்டை சேர்ந்த முத்துப்பட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எமது செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை